கேப்டன் விஜயகாந்தின், மரண செய்தியை அறிந்து... கண்ணீருடன் நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை வைரலாகி வருகிறது.
நடிகர் - அரசியல்வாதி என இரண்டு குதிரைகளில், ஒரு காலத்தில் வெற்றிகரமாக பயணித்தவர் கேப்டன் விஜயகாந்த். நடிகர் சங்க பணியில் இவரின் பணிகள் அளப்பறியாதது. நடிகர் சங்க கட்டிடம் கடனில் இருந்தபோது, கலைநிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் வந்த நிதியை கொண்டு நடிகர் சங்கத்தை மீட்டவர். மேலும் தயாரிப்பாளர்களுக்கு உதாரணமாக, அணைத்து தொழிலாளர்களுக்கும் பல வகை பதார்த்தங்களுடன் உணவு வழங்கி சமத்துவத்தை வார்த்தைகளால் மட்டும் இன்றி, செயலால் நிரூபித்தவர்.
சிறந்த மனிதராக மக்களின் உண்மையான தலைவனாக பார்க்கப்படும் கேப்டன் விஜயகாந்த்... கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி இருந்த நிலையில், நேற்று இவருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்ய பட்டது. இதை தொடர்ந்து இவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து, இன்று காலை 6.10 மணிக்கு விஜயகாந்த் உயிர் பிறந்ததாக தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிட்டு தெரிவிக்கப்பட்டது.

Vijayakanth Wish: இரண்டு மகன்கள் இருந்தும்... கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் ஆசை!
விஜயகாந்தின் மறைவை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள்... தேமுதிக அலுவலகம் முன்பு கூறி கண்ணீர் விட்டு கதறி வருகிறார்கள். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், உள்பட பலர் விஜயகாந்துக்கு நேரிலும் சமூக வலைத்தளம் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில்... நடிகர் சங்க தலைவரும், நடிகருமான நாசர் உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு விஜயகாந்த் செய்த செயல்களை நினைவு கூர்ந்துள்ளார்.
இந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, "செய்தி கேட்டவுடன் உண்மைதானா ? என ஆயிரம் பேரை கேட்டுத் தெரிந்து உறுதிப்படுத்திக் கொண்டபோது சொல்லொண மனத்தளர்வு ஏற்பட்டது. இதுவேதான் கேப்டன் என்ற பெயரை அறிந்தவர்க்கெல்லாம் ஏற்பட்டிருக்கும் முரட்டுத்தனமான நேர்மை எப்போதும் மக்கள் பற்றிய சிந்தனை, களைப்பில்லா உழைப்பு, தமிழ் திரையுலகத்தின் முக்கியத்தூண் அடையாளமற்று கிடந்த அடையாறு திரைப்படக் கல்லூரியின் இரும்புக் கதவை திறந்து விட்டவர்.

அதிகமான திரைப்படக் கல்லூரி இயக்குனர்களை அழைத்து வந்தவர். கையொடிந்த தயாரிப்பாளர்களை கைதூக்கிவிட்டவர். இன்று சீரிய வகையில் இயங்கிக் கொண்டிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தை மீட்டுத் தந்து புதுரத்தம் பாய்ச்சியவர். அவர் அலுவலகம் அட்சய பாத்திரமாய் இருந்தது. அவரால் பசிதீர்ந்த பல்லாயிரம் நல்மனங்கள் இன்று அவரை கண்ணீரோடு நினைவு கூறும். அவர்கள் வேண்டுதல் அவரை இறையின் பக்கம் கொண்டு நிறுத்தும். அரசியல் களம் ஒரு போர்க்களம் என தெரிந்தும் நிராயுதபாணியாய் மக்கள் நலமே தன் பலமென துணிவோடு ஒரே நோக்காய் செயல்பட்டவர்.
ரோஜா, த்ரிஷா, ஜூனியர் NTR உள்ளிட்ட பல பிரபலங்கள் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்..!
ஏழைகளின் குரலாக, நலிந்தோரின் துணையாக கடைசி மூச்சுவரை ஓங்கி ஒலித்தவர் இன்று நம்மோடு இலையே என்ற உண்மை நற்பகலை காரிருள் கவ்வுகிறது நமக்கே ஆறுதல் வேண்டும் போது ஆறுதலை யாருக்கு அளிக்கமுடியும் அவரின் மறைவுதந்த குடும்பத்தாரின், நண்பர்களின், தொண்டர்களின், தோழர்களின் துக்கத்தோடு தென்னிந்திய நடிகர் சங்கமும் கலந்து மனம் உருகி மரியாதை செலுத்துகிறது. என நடிகர் சங்கம் சார்பில், நாசர் அறிக்கை வெளியிட்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்".