nadigar sangam Nomination executive member death in accident
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், நியமன செயற்குழு உறுப்பினருமான காஜா மொய்தீன் (65) சனிக்கிழமை காலை விபத்தில் காலமானார். அவரது அகால மரணத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.
"தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், நியமன செயற்குழு உறுப்பினருமான காஜா மொய்தீன் சென்னையில் நடந்த விபத்தில் அகால மரணம் அடைந்ததை அறிந்து மிகவும் வேதனை அடைக்கிறோம்.
நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வந்த அவரது இழப்பு நடிகர் சங்கத்திற்கு ஈடுகட்ட இயலாத மாபெரும் இழப்பாகும், அன்னாரது மறைவால் மீளா துயரத்தில் வாடும் அவருடைய குடும்பத்தினர் துக்கத்தில் பங்குகொண்டு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்." என தெரிவித்துள்ளனர்.
மேலும் இவரது உடலுக்கு பல திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
