ஊரடங்கு உத்தரவு காரணமாக, படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடங்கியுள்ளதால்,  நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நலிந்த நடிகர்கள் பலர், சாப்பிட கூட போதிய வசதி இல்லாமல்,  வறுமையில் வாடும் நிலை உருவாகியுள்ளது. 

ஊரடங்கு உத்தரவு காரணமாக, படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடங்கியுள்ளதால், நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நலிந்த நடிகர்கள் பலர், சாப்பிட கூட போதிய வசதி இல்லாமல், வறுமையில் வாடும் நிலை உருவாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகர் சங்கம் தற்போது தனி அதிகாரியின் கையில் உள்ளதால், அவர் முடிந்த வரை... பிரபலங்கள் மூலம் நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களுக்காக, பணமாகவும், பொருட்களாகவும் உதவிகளை கேட்டு வழங்கி வருகிறார்.

இந்நிலையில் ஏற்கனவே, நடிகர் சங்கத்திற்கு ஐசரி கணேஷ், கார்த்தி, நாசர், யோகி பாபு, நடிகர் விவேக் போன்றவர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்துள்ள நிலையில், தற்போது நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியின் தரப்பில் இருந்து, முக்கிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இதில், தமிழக அரசு தமிழ்நாடு திரைப்பட நலவாரியத்தில்‌ உறுப்பினர்களாக உள்ள தென்னிந்திய நடிகர்‌ சங்க உறுப்பினர்களுக்கு ரூ. 1000 அவரவர்‌ வங்கி கணக்கில்‌ செலுத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

அதனடிப்படையில்‌ நடிகர்‌ சங்க உறுப்பினர்கள்‌ ( திரைப்பட நல வாரியத்தின்‌ உறுப்பினர்கள்‌ மட்டும்‌ ) கீழ்காணும்‌ ஆவணங்களை 10 & 11.4.2020. ஆகிய இரு தினங்களுக்குள்‌ nsct2015@gmail.com என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கும்‌, மின்னஞ்சலில்‌ அனுப்ப இயலாதவர்கள்‌ 98656 03660, 98417 65110 ஆகிய அலைபேசி வாட்ஸ்‌ ஆப்‌ எண்ணிற்கு போட்டோ, நகல்‌ எடுத்து அனுப்புமாறு அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

தேவையான ஆவணங்கள்‌

1. திரைப்பட நலவாரிய புத்தகத்தின்‌ முதல்‌ பக்கம்‌.
2 வங்கி கணக்கு புத்தகத்தின்‌ முதல்‌ பக்கம்‌ (அல்லது) காசோலை.

3. நடிகர்‌ சங்க உறுப்பினர்‌ அடையாள அட்டை.

இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி தெரிவித்துள்ளார். இது பல, பல்வேறு இடங்களில் வசித்து வரும், நலிந்த கலைஞர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.