nadigar sangam help in actor halwa vasu family
ரஜினிகாந்த், சத்யராஜ், போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் அல்வா வாசு. சமீப காலமாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உடல், அவருடைய சொந்த ஊரான மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க பட்டிருந்தார்.
கடந்த சில மாதங்களாக தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு, இனி மருத்துவம் பார்க்க பணம் இல்லாததால் அவருடைய குடும்பத்தினர் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவருடைய மனைவி தன்னுடைய கணவர் உயிரை காப்பாற்ற அனைவரும் உதவுமாறும் கேட்டுள்ளதாக, தகவல்களும் பரவியது.
இந்நிலையில் நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் நடிகர் சங்கத்தில் இருந்து 20000 ரூபாயை திரட்டி உடனடி செலவுக்காக அனைவரின் ஒப்புதல் வாங்கி அவருடைய குடும்பத்துக்கு அளித்துள்ளார்.
மேலும் அவருடைய மனைவியின் வங்கி கணக்குக்கு அனைவரும் பணம் அனுப்புவதற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என்றும் .நடிகர் சங்க பொதுச்செயலாளரும் , பொருளாளரும் தனிப்பட்ட முறையில் நிதி உதவி வழங்க உள்ளதாகவும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
