நடிகர் சங்க தேர்தல் பணிகள் ஆரம்பமான நாளில் இருந்தே, இந்த தேர்தல் நடக்காது என அடித்து கூறியவர் பழப்பெறும் நடிகர் ராதாரவி. 

2015 ஆம் ஆண்டு, இவருடைய தலைமையிலான அணி, பல்வேறு ஊழல்கள் செய்திருப்பதாக கூறி, அதனை வெளிச்சம் போட்டு காட்டுவோம் என 'பாண்டவர் அணி' என்கிற பெயரில் நடிகர் சங்க தேர்தலில் குதித்து, வெற்றியும் கண்டனர் விஷால் அணியினர்.

இந்நிலையில், சென்னை தென் மாவட்ட அனைத்து சங்கங்களில் பதிவாளர் திடீர், என நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்துள்ளார். இதுகுறித்து  குறித்து, கருத்து தெரிவித்துள்ள நடிகர் ராதாரவி,  நடிகர் சங்க பதவியில் இருந்தவர்கள் நிர்வாகம் எல்லாமே பொய் தான். சட்டம் தான் கடமையை செய்யும் என கூறியுள்ளார்.

மேலும், அவர்கள் புதிதாக எதையும் செய்யவில்லை, என விஷால் அணியினரை வெளுத்து வாங்கியுள்ளார்.