‘நடிகர் சங்கத் தேர்தலை விட பொதுமக்கள் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம் எனவே தேர்தல் நடைபெறவிரு[ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ஜானகி எம்ஜியார் கல்லூரியில் வாக்குப்பதிவு நடத்த அனுமதி இல்லை என்றும் ஈசிஆர், ஓஎம் ஆர் போன்ற போக்குவரத்து தொந்தரவு அற்ற பகுதிகளில் நடத்திக்கொள்ளுமாறும்  சென்னை உயர்நீதி மன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் நடக்க இன்னும் சரியாக 5 நாட்களே உள்ள நிலையில் கோர்டின் இந்தத் தீர்ப்பு தேர்தலில் பங்குபெறும் இரு அணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் தேர்தல் நடந்தால் பாதுகாப்பு தரமுடியாது என்று காவல் துறையினர் ஏற்கனவே கைவிரித்திருந்த நிலையில், இந்த குறைந்த கால இடைவெளியில் வேறு இடம் பார்த்து தேர்தலை அதே தேதியில் நடத்த முடியுமா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.

இன்றைய கோர்ட் தீர்ப்பில்,...நடிகர் சங்க தேர்தலை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வேறு இடத்தில் நடத்திக் கொள்ளுமாறு  அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம் வேறு இடம் குறித்து நாளையே தெரிவிக்குமாறும் நடிகர் சங்கத்திற்கு  உத்தரவிட்டுள்ளது. இதே பிரச்சினை தொடர்பான விஷாலின் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.