ஜூன் 23 ஆம் தேதி நடைபெற உள்ள, நடிகர் சங்க தேர்தலுக்காக இரு அணியைச் சேர்ந்தவர்களும் விடாப்பிடியாக தற்போது ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  குறிப்பாக நாடக நடிகர்களின் ஆதரவு கோரி ஊர் ஊராக சென்று வாக்கு கேட்டு வருகின்றனர்.

தேர்தல் நடைபெற இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில்,  தேர்தல் நடப்பதாக கூறப்படும் கல்லூரியில், பாதுகாப்பு கருதி போலீசார் நடிகர் சங்க தேர்தல் நடத்த, தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் இரு அணியினரும் அதிருப்தியில் உள்ளனர்.  மேலும் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. 

 இது ஒருபுறம் இருக்க,  தேர்தல் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட அதே கல்லூரியில், நடிகர் எஸ்.வி. சேகரின் நாடகத்தை நடத்த மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

எனவே நடிகர் சங்க தேர்தலை நிறுத்துவதற்காக சிலர் சதி செய்வதாக  நாசர் மற்றும் பாக்கியராஜ் என இரு தரப்பினரும் குமுறி வருகின்றனர்.  ஏற்கனவே நடிகர் நாசர்,  தேர்தல்  நடைபெறக் கூடாது என சிலர் சதி செய்து வருவதாக நேரடியாகவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.