nadigar sangam distribute for eye glass
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் நாசர் தலைமை பொறுப்பு ஏற்றதில் இருந்து குரு தட்சணை திட்டம் என்கிற திட்டத்தை உருவாக்கி அதன்மூலம் மூத்த உறுப்பினர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து தரப்படுகின்றன.

இந்நிலையில் மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகனும், கண் மருத்துவருமான விஜய் சங்கர் குருதட்சணை திட்டத்தின் கீழ் மூத்த கலைஞர்களுக்கு கண்பரிசோதனை செய்து இலவச கண் கண்ணாடிகள் வழங்கினார்.

இன்று நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சரவணன் மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்களான லலிதா குமாரி, மனோ பாலா உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.
