கடைசியாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டிருந்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சங்க உறுப்பினர்கள் பலரை நீக்கியது தொடர்பாகவும், தபால் வாக்குகள் அளிக்கப்படாதது குறித்தும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதுமட்டுமின்றி புதிய தேர்தலை நடத்தி முடிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் என்பவரை நியமித்த நீதிமன்றம், 3 மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.இந்த தீர்ப்பை எதிர்த்து விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். 

கடைசியாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். எனினும் இந்த வழக்கில் வாதங்கள் நிறைவு பெறாததால், வழக்கு விசாரணையை செப்டம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்த உயர் நீதிமன்றம் அன்றே இறுதிக்கட்ட விசாரணையை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.