14வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று சிறப்பாக தொடங்கியது. இந்த திரைப்பட விழா வரும் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதன் தொடக்கவிழாவில் இயக்குனர் பாரதிராஜா, பாக்யராஜ்,  நடிகர் சங்க நிர்வாகிகள் விஷால், கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் 65 நாடுகளை சேர்ந்த 165 சிறந்த படங்கள் திரையிடபடுகிறது.

இவை சென்னை காசினோ திரையரங்கில் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த விழாவின் இறுதியில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.3 லட்சம் நடிகர் சங்கம் சார்பில் பரிசு வழங்கப்படும் என நடிகர் சங்க நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த திரைப்பட விழாவில் '24, அம்மா கணக்கு, தேவி, தர்மதுரை, இறைவி, ஜோக்கர், கர்மா, நானும் ரௌடி தான், பசங்க-2, ரூபாய், சில சமயங்களில், உறியடி' ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.

மேலும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் அவர் நடித்த 'அடிமைப்பெண்' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன்'  சூர்யகாந்தி போன்ற படங்களும் திரையிடப்படுகின்றன.