நடிகர் சங்கம் சார்பாக அணைத்து நடிகர்களும் ஒன்றினைந்து இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது இந்த போராட்டம் நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்று வருகிறது, ஆனால் மெரினாவில் இருக்கும் போராட்டக்காரர்கள் நடிகர்கள் போராட்டம் செய்து , மீடியாவை திசை திருப்ப பார்க்கின்றனர் என குற்றச்சாற்றை வைத்தனர்.

இதன் காரணமாக நடிகர் சங்க தலைவர் நாங்கள் நடத்தும் நாசரும் எங்களது போராட்டத்தை எந்த மீடியாவும் ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார்.

இதன் காரணமாகவே என்னவோ தற்போது நடிகர் சங்க போராட்டக் குழுவுடன் இணையாமல் நடிகர் சூர்யா மக்களோடு மக்களாக மெரினாவில் போராட்டத்தில் இணைந்துள்ளார்.