தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் கடந்த மாதம், அதிருப்தியை தெரிவிக்கும் விதமாக போராட்டத்தில் ஈடு பட்டனர்.

 சென்னை தியாகராய நகரில் இயங்கும் சங்க அலுவலகத்தை முன் முற்றுகையிட்டு, அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பூட்டினார்கள். மறுநாள் பூட்டை உடைக்க முயன்ற விஷாலை போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.

 இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது பின்னர் கோர்ட் உத்தரவின்படி அதிகாரிகள் பூட்டை திறந்து அலுவலகத்தை விஷால் தரப்பினரிடம் ஒப்படைத்தனர்.  இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழுவை கூட்டி விவாதித்து சங்க அலுவலகத்தை பூட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது உறுப்பினர்கள் அல்லாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தனர் அதன்படி சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டதாக,ஏ .எல். அன்பழகன், எஸ். வி சேகர் உள்பட  29 உறுப்பினர்களுக்கு தயாரிப்பாளர்கள்சங்கம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

விதியை மீறி சங்க அலுவலகத்தை பூட்டி அதற்கு 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது .