nadasha soori accident for bungee jamping game
2006 ஆம் ஆண்டு இந்திய அழகி பட்டம் வென்ற பாலிவுட் நடிகை நடாஷா சூரி இந்தோனேஷியாவில் பிங்கி ஜம்பிங் செய்த போது அவர் காலில் கட்டி இருந்த கயிறு அறுந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இந்த சம்பவம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகை நடாஷா சூரி அண்மையில் இந்தோனேஷியாவில் உள்ள கடை திறப்பு விழாவில் கலந்துக்கொண்டுள்ளார். இந்த விழா முடிந்தவுடன் பங்கி ஜம்பிங் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார்.
பங்கி ஜம்பிங் செய்யும்போது துரதர்ஷ்டவசமாக அவரது கயிறு பாதியிலேயே அறுந்து விழுந்துள்ளது.
பங்கி ஜம்பிங் செய்தது ஆற்றை ஒட்டிய இடம் என்பதால் கயிறு அறுந்தவுடன் தலைகீழாக ஆற்றின் உள்ளே விழுந்துள்ளார். தற்போது அவர் இந்தோனேஷியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 
நடாஷா சூரி இது வரை நவி குயீன், மிஸ் மகாராஷ்டிரா, மிஸ் இந்திய, சிரிப்பு அழகி உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றுள்ளார். மேலும் நடாஷா மலையாள சூப்பர் ஸ்டார் திலீப்புடன் 'கிங் லியர்' படத்திலும், பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
