naatchiyaar movie 2nd teaser released
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'நாச்சியார்' திரைப்படம் வரும் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. 
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசரிலும் ஜோதிகா காக்கி உடையுடன் ஒரே ஒரு வசனம் தான் பேசியுள்ளார். அது 'கோயிலா இருந்தாலும் குப்ப மேடா இருந்தாலும் எங்களுக்கு ஒண்ணுதான்' என்கிற வசனம்.
டீசரின் ஆரம்பத்தில்... ஜி.வி. பிரகாஷ் செல்லாத்தா மாரியாத்தா என பின்னணியில் பாடல் ஒலிக்க சாமிக்கு பூஜை செய்வது போல் உள்ளது.
பின் முஸ்லீம்கள் பற்றிய 'அல்லா அல்லா' பாடல்
அடுத்ததாக கிருஸ்துவர்களின் 'தேவரின் கோவிலிலே அனைவரும் குழந்தைகளே' பாடல்
புத்திசத்தை பற்றிய பாடல் காட்சி
பின் ஜோதிகாவின் தெறி வசனம் என இந்த இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்தப்படத்தின் முதல் டீசர் வெளியானபோதும் ஜோதிகா தே... என்கிற ஒரு வார்த்தை தான் பேசினார். ஜோதிகா பேசிய அந்த வார்த்தையால் மிகப்பெரிய சர்ச்சைகள் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
