அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? முதல்வரையும் விட்டு வைக்காத மீரா மிதுன்! ஐடி ரெய்டு பற்றி பேசிய ஆப்பு வாங்கிய சோகம்!
பிரபல மாடலும் நடிகையுமான, மீரா மிதுன் கொரோனா வைரஸால் தற்போது போடப்பட்டிருக்கும் ஊரடங்கு ஓய்வை எப்படி, கழிப்பது என தெரியாமல் விதம்விதமான சர்ச்சையை இழுத்து வருகிறார்.
பிரபல மாடலும் நடிகையுமான, மீரா மிதுன் கொரோனா வைரஸால் தற்போது போடப்பட்டிருக்கும் ஊரடங்கு ஓய்வை எப்படி, கழிப்பது என தெரியாமல் விதம்விதமான சர்ச்சையை இழுத்து வருகிறார்.
ஏற்கனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளராக அனைவராலும் அறியப்பட்ட இவர், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான இயக்குனரும், நடிகருமான சேரனையே குலுங்க குலுங்க அழ வைத்துவிட்டார்.
பின் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபின்னும் கூட, முகேனின் பற்றி சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விதத்தில் இவர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. ஆனால் இது தன்னுடையது இல்லை என மீரா மிதுன் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம், ரசிகர்களுக்கு இவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியதால், இவர் நடிக்க இருந்த பெரிய பட்ஜெட் படங்களின் வாய்ப்பை கூட நழுவவிட்டார். பின்னர் கோலிவுட் தனக்கு சரி பட்டு வராது என, பாலிவுட் திரையுலகில் நடிக்க உள்ளதாக கூறிய மீரா மிதுன், அங்கு பட வேட்டை நடத்தியும் எதுவும் சரிப்பட்டு வராததால்.... ச்சீ... ச்சீ... இந்த பழம் புளிக்கும் என எண்ணம் தோன்றியதால் என்னவோ, மீண்டும் சென்னைக்கே வந்துவிட்டார்.
இந்நிலையில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் இவர், ஐடி ரெய்டு பற்றி பேசி நெட்டிசன்களிடம் பங்கமாக ஆப்பு வாங்கி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்... அமைச்சர்கள் அனைவர் வீடுகளிலும் ஐடி ரெய்டு நடத்த வேண்டும். குறிப்பாக தமிழக முதல்வர் சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட அனைவர் வீட்டிலும் வருமான வரித்துறை ரெய்டு செய்ய வேண்டும். அப்படி நடத்தினால் கோடிக்கணக்கில் அவர்கள் வைத்துள்ள பணத்தை கொண்டு அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்சம் கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.
மற்றொரு ட்விட்டிலும், சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக:
நான் உண்மையை பேசியபோதிலும் விஜயபாஸ்கர் தரப்பில் இருந்து மிகவம் மோசமாக நடந்து கொள்கின்றார்கள். அவர்களின் ஆட்கள் என்னை மிரட்டி என்னுடைய டுவிட்டை டெலிட் செய்ய சொல்கிறார்கள். இந்த அரசு தவறாக செயல்படுகிறது. ஒவ்வொருவரும் சுத்த வேஸ்ட். தமிழ்நாடு பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது. என்னென்ன தவறு நடக்கின்றது என்பதை விரைவில் விளக்குகின்றேன்’ மோடி அவர்களுக்கு என்று கூறியுள்ளார்.
ஆனால் மீராமீதுன் இப்படி பேசியதை, நெட்டிசன்கள் சற்றும் கண்டுகொள்ளாமல் எப்போதும் போல் இவரை வெளுத்தி வாங்கி விமர்சித்து வருகிறார்கள்.
நம்புற மாதிரி எதையாவது சொல்லுமா..? இது தான் மீரா மிதுனின் ட்விட்டை படைக்கும் பலரது மைண்ட் வாய்ஸ் பாஸ்..