இன்று தல அஜித்தின் பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் தீவிர ரசிகர்கள், தங்களால் முடிந்த உதவிகளை, ஆதரவற்றோருக்கும், முதியோர் இல்லங்களுக்கும் சென்று நேரடியாக வழங்கி வருவதால், அஜித்துக்கும் மட்டும் அல்ல அவருடைய ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அஜித்தின் படம் வெளியானாலே...  பெரிய, பெரிய, கட்டவுட், ப்ளக்ஸ், அடித்து அமர்க்களம் செய்யும் அஜித் ரசிகர்கள், அவருடைய பிறந்தநாள் என்றால் சொல்லவா வேண்டும்... எங்கு பார்த்தாலும் போஸ்டர், கட்டவுட் மற்றும்  வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், அஜித் பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் அஜித்தின் தீவிர ரசிகர்களின் ஒருவரான இசை வித்வான், ராஜேஷ் வார்த்தைகளால் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதை காட்டிலும், சற்று வித்தியாசமாக அஜித்தின் 'சிட்டிசன்' படத்தில் இடம்பெற்ற, வாத்திக்குச்சி பத்திக்காதுடா பாடலை இசைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இவரின் இந்த வித்தியாசமான வாழ்த்துக்கு ரசிகர்கள் தங்களுடைய நன்றிகளை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.