Music release will be false - Mishkin Open Dog ...

பொதுவாக என்னுடைய படமாக இருந்தாலும், இசை வெளியீட்டு விழா என்பது பொய்யாகத் தான் இருக்கும் என்று இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் தியாகராஜன் இயக்கத்தில் பவன் மீடியா வொர்க்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சீமத்துரை.

இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில், கீதன், வர்ஷா பொல்லம்மா, இசையமைப்பாளர் ஜோஸ், இயக்குனர் மிஷ்கின், வசந்தபாலன், மனோபாலா, தயாரிப்பாளர் சிவா, தனஞ்செயன் ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மிஷ்கின், "பொதுவாக என்னுடைய படமாக இருந்தாலும், இசை வெளியீட்டு விழா என்பது பொய்யாகத் தான் இருக்கும். ஆனால், இங்கு வந்திருப்பவர்களின் பொய்யற்ற வெகுளித்தனத்தை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்தின் இயக்குனர் என்னை பார்க்க வந்தபோது தான் அவரை முதல் முறையாக பார்த்தேன். அவரது நம்பிக்கையே "சீமத்துரை" படம் நன்றாக இருக்கும் என்று எனக்கு உறுதி அளித்தது.

தான் வாழ்ந்த மண் சார்ந்தே முதல் படத்தை இயக்கியுள்ள இயக்குனருக்கு வாழ்த்துக்கள். இசை வெளியீட்டு விழாவின்போது தனது முதல் படத்திலேயே படம் உருவான காட்சிகளை ஒளிபரப்பியது எனக்கு பிடித்திருந்தது. இதே போன்றுதான் நானும் "சித்திரம் பேசுதடி" படத்தில் செய்திருந்தேன்.

இப்படத்தின் டிரைலரில் "கருவாடு" விற்பது போன்று காட்சிகள் இருந்தது. உலகின் மிகமிக சுவையான உணவு எதுவென்று கேட்டால் அது கருவாடு தான். பழை சாதத்திற்கும், கருவாட்டுக் குழம்பிற்கும் இணையான உணவு இந்த உலகில் கிடையாது.

இங்கு மூன்று பாடல்களை ஒளிப்பரப்பினார்கள். ஆனால், நேரம் காலம் கருதி அதனை குறைத்திருக்கலாம். ஆனால், அத்தனை பாடல்களும் நம்மை பார்க்க வைத்தது.

இப்படத்தை உருவாக்கிய அத்தனை கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.