பாகுபலி படத்தின் இசையமைப்பாளர், எம்.எம்.கீரவாணியின் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தெலுங்கு திரையுலகின், முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்படும், எம்.எம்.கீரவாணியின் தாயார் பானுமதி, வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கீரவாணியின் குடும்பத்தினர் பானுமதியின் உடலை எஸ்.எஸ்.ராஜமௌலியின் இல்லத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும். அங்கு தான் அவரது இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் கீரவாணி இயக்குனர் ராஜமௌலியின் சகோதரரர் என்பது குறிப்பிடத்தக்கது. கீரவாணியின் தாயார் மரணம், அவரது குடும்பத்தினரை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

40 வயதில்... குழந்தை பெற்ற பிறகும்.. குறையாத கவர்ச்சி! மேலாடையை கழட்டி கிளுகிளுப்பேற்றும் நடிகை ஸ்ரேயா சரண்!

பாகுபலி திரைப்படத்தின் மூலம், உலக அளவில் பிரபலமான கீரவாணி... இதை தொடர்ந்து, இசையமைத்த 'ஆர் ஆர் ஆர்' திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது தமிழ் படங்களுக்கும் இவர் இசையமைத்து வருகிறார். கீரவாணியின் தயார் மரணம் குறித்து அறிந்து, பிரபலங்கள் பலர் தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.