சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வைரலாக பரவி, ஒளிந்திருக்கும் திறமையை வெளிப்படுத்தி, அவர்களுடைய வாழ்க்கையே வெளிச்சமாக்கி விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரனகத் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ரனு மண்டல் என்ற பெண், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஸ்கரின் பாடல் ஒன்றைப் பாடி பிச்சை எடுத்த போது,  அதனை வீடியோ எடுத்து ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாகி தற்போது ரனுவிற்கு பாட வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கிறது.

இந்நிலையில் நேற்றைய தினம், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நொச்சிப்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வரும் பார்வையற்ற இளைஞர் திருமூர்த்தி என்பவர் 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்றிருந்த 'கண்ணான கண்ணே... கண்ணான கண்ணே" என்ற பாடலை பாடிய வீடியோவை அஜித்தின் ரசிகர் ஒருவர் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட அது வைரலாக பரவியது.

இந்த வீடியோ வெளியான 24 மணி நேரத்திலேயே 4 லட்ச பார்வையாளர்களை பார்க்கப்பட்டு, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் ஷேர் செய்யப்பட்டது.  மேலும் பலர், அருமையான குரல் வளம் கொண்ட இந்த பார்வையற்ற இளைஞருக்கு திரையுலகில் பாட வாய்ப்பு கிடைக்குமா?  என கேள்விகளையும் எழுப்பி இருந்தனர்.

இந்த வீடியோ 'விஸ்வாசம்' படத்தின் இசையமைப்பாளர் இமான் கண்ணில் பட,  அவர் உடனடியாக இந்த வீடியோவை பதிவிட்ட அஜித் ரசிகரை தொடர்பு கொண்டு, திருமூர்த்தியின் எண்ணை வாங்கி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

மேலும் விரைவில் அவருக்கு தன்னுடைய இசையமைப்பில் உருவாகும் படம் ஒன்றில் பாட வாய்ப்பு தருவதாகவும் கூறியுள்ளாராம். இந்த தகவலை இமான் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து. அவருக்கு கடவுள் துணை இருப்பர் என பதிவிட்டுள்ளார். 

24 மணி நேரத்தில், பார்வையற்ற இளைஞருக்கு பாட வாய்ப்பு கொடுத்த இம்மனுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்த வருகிறார்கள். 

"