திரைப்படங்களுக்கு ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் வெளியிடுவது போல ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பில் அஜீத்துடன் எடுத்துக்கொண்ட படத்தை ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிட்ட இசையமைப்பாளர் ஜிப்ரான், தற்போது அஜீத்தே எடுத்த புகைப்படத்தை செகண்ட் லுக்காக வெளியிட்டிருக்கிறார்.

கடந்த வாரம் இயக்குநர் விநோத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பு தளத்தில் சந்திக்கச் சென்றிருந்த இசையமைப்பாளர் ஜிப்ரான் தான் அஜீத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ‘விரவில் நாம சேர்ந்து பணியாற்றலாம்’ என்று சொன்னதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அஜீத் போன்ற ஒரு நல்ல மனிதரை இதுவரை நான் சந்தித்ததே இல்லை என்று சிலாகித்திருந்தார்.
அதே படப்பிடிப்புத் தளத்தில் தன்னையும் நடிகை வித்யாபாலனையும் வைத்து அஜீத் எடுத்த புகைப்படம் ஒன்றை செகண்ட் லுக்காக நேற்று இரவு வெளியிட்டிருக்கும் ஜிப்ரான், ''இந்தியாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர் வித்யாபாலன். இந்தப் புகைப்படத்துக்கு என்னால் போஸ் கொடுக்கமுடியவில்லை; கேமராவிற்கு பின்னால் இருந்த அஜித்தை மட்டுமே எனது கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன. இந்தப் புகைப்படத்துக்காக அஜித்துக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
இந்த புகைப்படத்துக்குக் கீழே கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்,” போற போக்கப்பாத்த இவரு அஜீத்துக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்காம விடமாட்டார் போலருக்கே’ என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.