இந்நிலையில் அந்த படத்தின் இசையமைப்பாளரான அனிருத் நேரலையில் பேட்டி அளித்துள்ளார்.  

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டார். கைதி, மாநகரம் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கி, சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப்படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனனும், வில்லனாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். ஆன்ட்ரியா, '96' புகழ் கவுரி கிஷான், மலையாள நடிகை லிண்டு ரோணி, வி.ஜே.ரம்யா என அழகு தேவதைகளும், சேத்தன், சஞ்சீவ், பிரேம், ஸ்ரீநாத், சாந்தனு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்றால் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதியே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே மாஸ்டர் திரைப்படம் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அனிருத் இசையில் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக தளபதி விஜய் மாஸ் ஸ்டெப் போட்ட வாத்தி கம்மிங் பாடல் டிக்-டாக்கில் செம்ம பிரபலம். பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு டிக்-டாக்கில் நடனமாடி அசத்தியுள்ளனர். தற்போது படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அந்த படத்தின் இசையமைப்பாளரான அனிருத் நேரலையில் பேட்டி அளித்துள்ளார். 

அதில், என் வீட்டிலேயே இசையமைப்புக்குத் தேவையான கருவிகள் இருப்பதால் நான் பின்னணி இசை வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வெளியீட்டுத் தேதி குறித்து தயாரிப்பாளர்கள் அறிவிப்பார்கள். எல்லாம் நன்மைக்கே. படம் என்று வந்தாலும் அன்று சிறப்பாக இருக்கும். அவ்வளவுதான். விஜய் சாரிடமும் பேசினேன். இந்த வேலைகளைச் செய்து வருகிறோம் என்று சொன்னேன். நாங்கள் எல்லோருமே படம் எவ்வளவு சீக்கிரம் வருமோ அவ்வளவு சீக்கிரம் வரட்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.