music director adhitian pass away
'அமரன்' திரைபடத்தின் மூலம் 1992 ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானவர் பிரபல இசையமைப்பாளர் அதித்யன். 63 வயதாகும் இவர் ஹைதராபாத்தில் நேற்று இரவு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
இவர், 'நாளைய செய்திகள்', 'சீவலப்பேரி பாண்டி', 'லக்கி மேன்', 'அசுரன்', 'மாமன் மகள் 'உள்ளிட்ட 50க்கும் மேல்ப்பட்ட திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களுக்கு இசையமைத்ததுடன். பல ரீ-மேக் அல்பங்களில் பாப் பாடல்களை பாடியுள்ளார்.

மேலும் பிரபல தொலைகாட்சி ஒன்றில் எட்டு ஆண்டுகளுக்கும் மேல் சமையல் நிகழ்ச்சி ஒன்றையும் நடத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவருடைய மரணம் குறித்து அறிந்த தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
