Music composition for the GV film by arr
“மின்சாரக் கனவு”, “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்” முதலிய படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன்.
கிட்டத்தட்ட இவர் பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.
அவர் தற்போது இயக்கவிருக்கும் படத்தின் பெயர் ‘சர்வம் தாள மயம்‘.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படம் மியூசிக்கை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என்பதால் இதில் ஒன்பது பாடல்கள் இடம்பெற இருக்கின்றன.
இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி பல மாதங்களாகிவிட்ட நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என்று ராஜீவ் மேனன் அறிவித்து உள்ளார்.
