சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத தமிழ் நடிகர்களில் ஒருவர் பவர் ஸ்டார் சீனிவாசன். நடிகர் சந்தானம், மற்றும் மருத்துவர் சேது நடித்து வெளியான 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்கிற படத்தில் அறிமுகமானார். இந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது மட்டும் இன்றி, பவர் ஸ்டார் காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து அடுத்தடுத்து, சில படங்களில் பவர் ஸ்டார் நடித்தாலும், முதல் படம் போல் இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில் அவ்வப்போது சில மோசடி புகார்களில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். 

தற்போது பவர் ஸ்டார், ஆர்.எஸ்.மணி இயக்கத்தில் நடிக்கும் முருங்கைக்காய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.  இந்தப் போஸ்டரில், நீல நிற சட்டை, பட்டு வேஷ்டி, அனைத்து கையிலும் கழுத்திலும் மல்லி பூவை சுற்றி கொண்டு முதலிரவு அறையில் ஹாய்யாக படுத்திருக்கிறார். இவருக்கு அருகே, பழ தட்டு உள்ளது. பால் செம்பு கீழே விழுந்து கிடப்பது போல் இந்த போஸ்டர் டிசைன் செய்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் மாரிமுத்து, தமிழ்ச்செல்வி ஆகியோர் நடித்துள்ளனர்.

 

 

குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு பிரேம்குமார் சிவ பெருமான் இசையமைக்கிறார். SSS  ஃபிலிம்ஸ் சார்பில் ரம்யா என்பவர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.