murugadoss talking about national award
ஒவ்வொரு வருடமும் சிறந்த கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் மட்டும் 5 பேருக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இதை அறிந்த பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து விருது பெற்றவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்மை காலமாக சரியான அங்கீகாரம் கலைஞர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில் முதன்முறையாக தேசிய விருது அறிவிப்புகள் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் தன்னுடைய மனதில் பட்ட கருத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
அதில், அவர் கூறி இருப்பது தேசிய விருத்திலும் ஊழல் நடைபெற்று வருகிறது, சிபாரிசின் அடிப்படையில் தான் தேர்வுக்குழு நடுவர்கள் விருது அறிவித்துள்ளதாக பலரது முகத்திரையை கிழித்துள்ளார்.
