முருகதாஸ் தற்போது டோலிவுட் முன்னனி நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன் பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா நடித்த அகிரா படத்தை இயக்கியிருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அந்த படத்தில் வில்லனாக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடித்திருந்தார், இவர் முதன் முறையாக தமிழில் நயன்தாரா, அதர்வா நடிக்கும் இமைக்கா நொடிக்கள் படத்தில் வில்லனாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தில் நயன்தாராவை சுற்றியே கதை உருவாக்க பட்டுள்ளது. அதனால் ஒரு நயன்தாராவுக்கு இணையான ஒரு வில்லன் நடிகரை தேடி கொண்டிருந்த அஜய்ஞானமுத்துவிற்கு அனுராக் காஷ்யப்பை பற்றி சொல்லி.

இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னதே முருகதாஸ் தானாம், அவர் கூறி தான் இதில் நடிக்க அனுராக் நயன்தாராவிற்கு வில்லனாக சம்மதித்தாராம், மேலும், இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குனர் அஜய்ஞானமுத்து, முருகதாஸ் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.