தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து கடைசியாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' திரைப்படம், படு தோல்வியடைந்ததை தொடர்ந்து, தற்போது விஜய்யை வைத்து 'சர்கார்' படத்தை இயக்கியுள்ளார் முருகதாஸ். 

இவர் இயக்கத்தில், மூன்றாவது முறையாக சர்கார் படத்தில் விஜய்  இணைந்து நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

சமீபத்தில் தான் சர்கார் படத்தின் கதை, திருட்டு கதை என எழுந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ள நிலையில், வரும் தீபாவளி தினம் அன்று வெளியாக உள்ள 'சர்கார்' திரைப்படம் எந்த பிரச்னையும் இல்லாமல் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வேண்டிக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஒரு சாதாரண பக்தர் போல எந்த உதவியாளர்களும் இல்லாமல் கோயிலுக்கு வந்து, காமாட்சி அம்மனை தரிசனம் செய்துள்ளார்.  முருகதாசை அடையாளம் கண்டு கொண்ட அர்ச்சகர் ஒருவர், அந்த விவரத்தை பூஜைசெய்து கொண்டிருந்த அர்ச்சகரிடம் கூறியிருக்கிறார்.

பிறகு, விரைவாக தரிசனத்தை முடித்துக்கொண்ட முருகதாஸ், கூட்டம் கூடுவதற்குள் 10 நிமிடங்களில் அங்கிருந்து வெளியேறிவிட்டார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது . மேலும் அவர் சாமி தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.