Muralis second son Akashs photo is now goes viral on social networks
நடிகர்களின் வழக்கம்
தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலர் தங்கள் வாரிசுகளை சினிமா வாடை தெரியாமல் வளர்க்க நினைப்பார்கள். அதற்கு சான்றாக ரஜினி, விக்ரம் போன்றோரை சொல்லாம். ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா தனுஷ், மற்றும் சௌந்தர்யா ஆகியோர் வளர்ந்ததும்தான் மீடியாவிற்கு முகத்தை காட்டினர்.
முரளி
அப்படி தனது குடும்பத்தை மீடியா வெளிச்சம் படாமலும் சினிமா வாடை இல்லாமல் வளர்த்து வந்தவர் மறைந்த நடிகர் முரளி.
ஆனால் முரளி உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த போது தனது முதல் மகனான அதர்வாவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு சிறிது நாட்களிலேயே உடல்நலம் குன்றி அவர் உயிரிழந்தார்.
அதர்வா
அதர்வா "பாணா காத்தாடி" படம் மூலம் அறிமுகமாகி தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தி கொள்ள பல படங்களில் நடித்து வருகிறார்.
இரண்டாவது மகன் ஆகாஷ்
இந்நிலையில் தற்போது முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.ஆகாஷ் தனது அண்ணன் அதர்வா மற்றும் அம்மா ஷோபா ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அண்ணனை போல தம்பி
மேலும் ஆகாஷும் தனது அண்ணனை போலவே திரையுலகில் கால் பதிக்கும் நேரம் நெருங்கி விட்டதாக கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் வட்டாரங்கள்.
