கர்நாடக இசையில் உலக அளவில் கொடி கட்டி பறந்தவர் இசை ஜாம்பவான் பாலமுரளிகிருஷ்ணா, தன் வாழ்நாளில் 81 ஆண்டுகளை இசைக்கு அர்ப்பணித்த பெருமை அவர் ஒருவரையே சேரும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் என பல இந்திய மொழிகளில் பல பாடல்களை பாடியவர், இவர் பாடிய பத்தி பாடல்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. இவரின் மறைவு திரைஉலகிற்கு மிக பெரிய பேரிழப்பு.

அவரின் மறைவிற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் நடிகர் கமல்ஹாசன், தனுஷ், பிரசன்னா, விஷால், பிரசன்னா, ஜி.வி.பிரகாஷ் , பாடகி சின்மயி, இயக்குனர் செல்வராகவன் , அனிருத், என பலர் ஆ ட்விட்டரில் அனுதாப செய்தி வெளியிட்டுள்ளனர்.