பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் சிறு பிரச்சனைகள் மட்டுமே வந்து ஓய்ந்தது. இதனால் பிக்பாஸ் ரசிகர்ள் பலர் 'முதல் சீசனை பார்த்து தற்போதைய போட்டியாளர்கள் மிகவும் தந்திரமாக விளையாடுவதாக கூறிவருகின்றனர்'. 

இதனை கமலிடம் ரசிகர்கள் நேரடியாகவே கேள்வி எழுப்பியபோது, ஒரு வாரம் இரண்டு வாரம் வேண்டுமானால் நடிக்கலாம் 100 நாள் நடிக்க முடியாது அவரின் உண்மையான குணம் வெளிவரும் என்று கூறினார்.

அவர் சொன்னது போல் இப்போது தான் பிரச்னையும் வெடிக்க துவங்கியுள்ளதாக தெரிகிறது. 

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில்... டானி மற்றும் வைஷ்ணவியிடம் மும்தாஜ், எப்படி ஒருவரின் உடல் நலத்தை வைத்து விளையாடுகிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்.

பின் வைஷ்ணவி மற்றும் டானி தனியாக பேசும் காட்சிகள் இடம்பெறுகிறது. அதில் வைஷ்ணவி 'இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டால் எப்படி இருக்கும் என எல்லோருக்குமே தெரியும், இங்க வந்து ஏன் உடல் நலத்தோடு விளையாடுகிறீர்கள் என்று சொன்னால் அது என்ன அர்த்தம் என கேட்கிறார்... உடம்பு முடியவில்லை என்றால் வீட்டில உட்காருங்க என்றும், நீ ஒரு காலத்துல ஃபேமஸ்ஸா இருந்த, இப்போ திரும்பவும் உன் பேன்ஸ் உன்னை பாராட்டனும் என்பதற்காக தான் இங்க வந்துருக்க என பின்னால் சென்று பேசுவது போல் இந்த ப்ரோமோவில் உள்ளது. 

எனவே இனி வரும் வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரச்சனைக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கலாம்.