பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது நாளான இன்று, பிக்பாஸ் வீட்டில் பாச பிணைப்புகள் போல இருந்த மும்தாஜ் மற்றும் ஷாரிக் ஆகியோருக்கு முதல் முறையாக சண்டை வெடிப்பது போல ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்த ப்ரோமோவில் மஹத் புடவை கட்டும் பிரச்சனை இருப்பதால், எல்லோருக்கும் இரண்டு மணி நேரம் வீணாகி உள்ளது என கூறுகிறார். பின் டானியல் நமக்கு ஏதாவது வேலை கொடுத்தால் அதனை முடித்து தூக்கி போட்டு விட வேண்டும் என கூறுகிறார்.

இதைதொடர்ந்து பேசும் மஹத், எல்லோரும் வேலை செய்து கொண்டிருக்கும் போது, மும்தாஜ் மட்டும் சரியாக வேலை செய்ய வில்லை என்று கூறுகிறார். இவரின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நடிகை மும்தாஜ் அப்போ இத்தனை நாள் நான் செய்தது எல்லாம் வேஸ்ட்டா என கூறி, மோசமாக வேலை செய்தவர்கள் லிஸ்டில் தன்னுடைய பெயரை எழுதி அனுப்புமாறு பிக்பாஸிடம் கோரிக்கை வைக்கிறார்.

இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஷாரிக் நீங்கள் எவ்வளவு நேரம் வீண் செய்தீர்களே அவ்வளவு நேரம் நீச்சல் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என கூறுகிறார். இதற்கு மும்தாஜ் முடியாது என கூற, ஷாரிக் செய்து தான் ஆகவேண்டும் என 
சொல்கிறார். இதற்கு முடியவே முடியாது என மும்தாஜ் கூறுவது போல் இந்த ப்ரோமோ உள்ளது. 

ஷாரிக் மும்தாஜை தன்னுடைய அம்மா என்று கூறி பாச மழையை பொழிந்து வந்த நிலையில் இன்று முதல் முறையாக இவர்களுக்குள் சண்டை வெடிக்கிறது என்பது குறிப்பிடதக்கது.