பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரு வாரமாக படு சென்சேஷனலான விஷயங்கள் நடந்தேறி வருகின்றன. இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது சர்வாதிகாரி டாஸ்க் தான். அந்த டாஸ்கில் பிக் பாஸ் கொடுத்த கீக்கு மிக பிரமாதமாக ஆடினார் ஐஸ்வர்யா. அந்த ஆட்டத்தின் போது அவர் நடந்து கொண்ட விதம், தான் மக்கள் மத்தியில் அவர் சம்பாதித்திருக்கும் எதிர்ப்பிற்கு காரணம்.

பாலாஜியின் தலையில் ஐஸ்வர்யா குப்பையை கொட்டியது, அவர் செய்த அட்டகாசங்களின் உச்ச கட்டம். இந்த சம்பவம் ஊடகங்களிலும் கூட கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பாலாஜி ஐஸ்வர்யாவின் அம்மாவை குறித்து தவறான வார்த்தையை உபயோகித்தார். என்பதனால் தான் அவர் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டதாக் ஐஸ்வர்யாவும் தன் தரப்பினை நியாப்படுத்த முயன்றார்.

அப்போது அவருக்கு ஆறுதல் கூறிய மும்தாஜ், பாலாஜி அவ்வாறு பேசுவதால் உன் அம்மாவோ, என் அம்மாவோ, தப்பானவங்க ஆகிடப்போறதில்லை. அவருக்கு தெரிந்த நாகரீகம் அவ்வளவு தான் என கூறி ஆறுதல் கூறினார்.

பாலாஜியும் அதற்கேற்ப தன்னுடைய கோபத்தையும் நாவையும் கட்டுப்படுத்தாமல், பல முறை கெட்ட வார்த்தைகளால் சக போட்டியாளர்களை திட்டி இருக்கிறார். எடிட் செய்யப்பட்ட நிகழ்ச்சியிலேயே அத்தனை பீப் இருக்கிறது பாலாஜியின் வசனத்தில். குப்பையை கொட்டியது தவறுதான் அதே போல குப்பை போன்ற வார்த்தைகளை ஒரு நபர் மீது கொட்டுவதும் தவறு தானே.