பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மீதான, ஆர்வம் தற்போது பலருக்கும் இல்லை. இதன் விளைவு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி அதல பாதாளத்தில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் நிகழ்ச்சியின் மீதான சுவாரிஸ்யத்தை ஏற்றும் வகையில் சில போட்டியாளர்கள் அவ்வப்போது சண்டை போட்டுக்கொண்டாலும், இவர்கள் தங்களுடைய பெயர் மக்கள் மத்தியில் டாமேஜ் ஆகிவிடக்கூடாது என, கோபத்தை கூட முழுமையாக காட்டாமல் உடனடியாக மன்னிப்பு கேட்கிறார்கள் இதனால், இவர்களிடம் போலி தன்மை உள்ளதாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அம்மா - பிள்ளை என்று உணர்வு பூர்வமான பந்தத்தில் இருந்த, ஷாரிக் மற்றும் மும்தாஜ் ஆகியோருக்குள் சண்டை வெடிக்கிறது.

ஷாரிக் எதோ மும்தாஜிடம் சொல்கிறார். அதற்கு மும்தாஜ் "நீ என்னுடைய ஆசிரியர் இல்லை என்னிடம் இப்படி நடந்து கொள்ளாதே என கூறி எச்சரிக்கிறார்". இதை தொடர்ந்து பேசும் ஷாரிக் உங்க குரல் ஏறக்கூடாது என கூறுகிறார். இதற்கு மும்தாஜ் இது என் இஷ்டம். உனக்கு கேட்க கூடாது என்றால் காதில் ஊசி போட்டுக்கோ என கூறுகிறார்.

ஷாரிகும் மும்தாஜ் வயதுக்கு, கூட மரியாதை கொடுக்காமல், மீண்டும் நீங்க போட்டுக்கோங்களேன் வாயில் பிளாஸ்திரி. இல்லை நான் வாயில் பிளாஸ்திரி போடுவேன் என கூறுகிறார்.

ஷாரிக்கின் பேச்சால் மிகவும் கோபத்திற்கு ஆளான மும்தாஜ் 'வா வந்து டச் பண்ணி பாரு என கூறுகிறார்'. ஷாரிக்கு ஒரே ஒரு விரலால் அவரது முதுகை தொடுகிறார். பின் மும்தாஜ் வேண்டா ஷாரிக் மரியாதையோடு இருந்துக்கோ என கண்ணீருடன் கூறுகிறார்.

இதனால் பிக்பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனையே வெடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வேணாம் அழுதுருவேன்! 🤐😢 #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/siTIhd2LWs
— Vijay Television (@vijaytelevision) July 25, 2018