Asianet News TamilAsianet News Tamil

’இன்னொருத்தியோட புருஷன்னு தெரிஞ்சே சுத்தினவதான நீ’...முகிலன் விவகாரத்தில் கவிஞர் தாமரைக்கு பதிலடி...

அவ்வப்போது எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாகாவிட்டால் கவிதாயினி தாமரைக்கு தூக்கம் வராது என்கிற வகையில் தற்போது முகிலன் விவகாரத்தில் மூக்கை நுழைத்து எக்கச்சக்கமாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார்.

mugilan issue
Author
Chennai, First Published Jul 8, 2019, 10:44 AM IST

அவ்வப்போது எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாகாவிட்டால் கவிதாயினி தாமரைக்கு தூக்கம் வராது என்கிற வகையில் தற்போது முகிலன் விவகாரத்தில் மூக்கை நுழைத்து எக்கச்சக்கமாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார்.mugilan issue

கடந்த 5 மாதங்களாகக் காணாமல் போய்த் திரும்பியிருக்கும் சமூக செயல்பட்டாளர் முகிலன் குறித்து எழுதப்பட்ட பதிவொன்றுக்கு பதிலளித்த தாமரை மிகவும் சூடாக

...முகிலனைப் புனித பிம்பமாக சித்தரிப்பவர்களுக்கு, கவிஞர் தாமரையின் பதில்.ஐயோ பாவம்...நீங்க இந்த '” போராளி அரசியல் வட்டாரத்து'” க்குப் புதிது போல...கொஞ்சம் தள்ளியிருந்து வேடிக்கை பாருங்கள்...

இந்த மாதிரி 'போலிப் போராளி'களெல்லாம் நிறையப் பார்த்தாயிற்று. பெண் பொறுக்குவதற்காகவே இந்த 'போராளி' வேடம் பூணும் அயோக்கியர்களை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை..நாங்கள் கூடவே ( சோறு போட்டு வைத்து ) வாழ்ந்திருக்கிறோம். எங்களுக்குத் தெரியும், ஆதாரமில்லாமல் பேசவில்லை.

பெண்ணை ஏமாற்றி விட்டு, விவகாரம் வெளியே வந்தவுடன் ஓடி ஒளிந்து கொண்டு, இப்போது 'வெளியே' வந்திருக்கும் அன்னாரை நீங்கள் வேண்டுமானால் மாலை போட்டு வரவேற்கப் போங்கள்..எங்களிடமிருந்து செருப்புதான் கிடைக்கும்.முகிலன் இன்னொரு தியாகு அவ்வளவுதான். தியாகு தப்பி வெளியே சுற்றுகிறான், முகிலன் உள்ளே போகப் போகிறான்...என்று எழுதியிருந்தார்.

தாமரையின் அந்தப் பதிவுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் நிலாபாரதி என்பவர் தனது முகநூல் பக்கத்தில்...

அப்படின்னா முகிலனையும் மீடியா &மக்கள் முன்னாடி பேச வுடலாமே எதுக்கு பேசவுடாம இழுத்துட்டுபோறாங்க உங்க கூட்டாளி காவல்துறை ?mugilan issue

நீங்க தியாகுவோட வாழ்றப்ப மைனர் பொண்ணா இல்லையே முடிவெடுக்க தெரியாத உங்கள ஏமாத்திட்டார்ன்னு சொல்ல ...இன்னொருத்தியோட புருசன்னு தெரிஞ்சே சுத்தவேண்டியது 
அப்பால பரபரப்பா பத்திரிக்கைகளுக்கு தீனி போட வேண்டியது ...

கொஞ்சமா கூவுங்க கவிதாயினி 
வன்மம் ஏழேழு தலைமுறைக்கும் வரப்பு கட்டி வைச்சிருப்பீங்க’ என்று பதிலளித்திருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios