காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல நடிகர்களோடு நடித்தவர். திருமதி ஒரு வெகுமதி என்கிற படத்தில் ஆரம்பித்த இவரது திரை பயணம் தற்போது வெளிவந்துள்ள கடவுள் இருக்கான் குமாரு படம் வரை தொடர்கிறது .

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காமெடியில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் எம்.எஸ்.பாஸ்கர், இவரின் காமெடி ஸ்டைலிற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் நேற்று அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்ந்தெடுக்கபட்டார்.

இதில் ஜெயலலிதவுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும், அவரது நினைவு நாளை விவசாயிகள் நாளாக கொண்டாடவேண்டும், மேலும் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது...

இதற்கு எம். எஸ் . பாஸ்கர் வெளியிட்டதாக அதிமுக கட்சி முட்டாள்கள் நிறைந்த கட்சி என்றும், இறந்த ஒருவருக்கு எப்படி நோபல் பரிசு கொடுக்க முடியும் என்றும், ஏற்கனவே டிசம்பர் 23 அன்று மறைந்த பிரதமர் சரண்சிங் அவர்களின் நினைவாக விவசாயிகள் தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

மேலும் குற்ற வழக்கு, சிறை சென்றவருக்கு எப்படி பாரத ரத்னா விருது கொடுப்பது என வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வைரலானது.

தற்போது அவர் இதை மறுத்துள்ளார். நான் இந்த பதிவை போடவில்லை என்றும் . எனக்கு அரசியல் ஈடுபாடு கிடையாது. என்னுடைய நண்பர்களான சிங்கமுத்து, மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோர் அந்த கட்சியில் உள்ளனர்.

நான் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.