'வேலைக்காரன்' படத்திற்குப் பின், நடிகை நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மிஸ்டர் லோக்கல்.

இந்த படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி இசையில் அமைந்த 'தாறு மாறு' என்கிற பாடலின் லிரிகள் வீடியோ வெளியாகி, ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

மேலும் இந்த படத்தில் யோகி பாபு, சதீஷ், ஆகிய காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் கடைசியாக அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில், 'கனா' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பின் வெளியாகும் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.