'வேலைக்காரன்' படத்திற்கு பின் நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மிஸ்டர் லோக்கல்'. இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். 

'வேலைக்காரன்' படத்திற்கு பின் நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மிஸ்டர் லோக்கல்'. இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். 

மே 1 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின், 'டக்குனு டக்குனு' என தொடங்கும் வீடியோ லிரிகள் பாடல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையில் அனிருத் இந்த பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியான 24 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. இது நயன்தாரா மற்றும் படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

சமீபத்தில் படவிழா ஒன்றில் மூத்த நடிகர் பேச்சால் கொஞ்சம் அப்செட் ஆன நயன்தாராவை இந்த செய்தி கூல் செய்துள்ளதாக திரைப்பட வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

வீடியோ பாடல் இதோ: