இணையதளங்களில் திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு போட்டியாக புதிய இணையதளம் அதிரடியாக களமிறங்கி உள்ளது. 

இணையதளங்களில் திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு போட்டியாக புதிய இணையதளம் அதிரடியாக களமிறங்கி உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து மொழி படங்களையும் பாரபட்சமின்றி திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது தமிழ் ராக்கர்ஸ். மேலும் சில தளங்கள் இருந்தாலும் திருட்டுத்தணமாக வெளியிடுவதில் தமிழ் ராக்கர்ஸை தனிக்காட்டு ராஜாவாக திக்ழந்தது. பெரிய பெரிய படங்களுக்கே அசால்டாக சவால் விட்டு படத்தை சொன்ன நேரத்தில் வெளியிட்டு திரைத்துரையினரை கதறடித்து வந்தது. சில படங்களை சவால் விட்டே வெளியிட்டு அதிரவைக்கும் தம்ழ் ராக்கர்ஸின் ஆதிக்கத்தை எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நிறுவனத்தின் அழிச்சாட்டியத்தையே தாங்க முடியாத தமிழ் சினிமாவை அழைக்க மற்றொரு அரக்கனும் களமிறன்ங்கி விட்டான். ஆம் , தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு சற்றும் குறையாமல் கடும் போட்டியாக தற்போது மூவிஸ்டா என்ற இணையதளம் ஒன்று தற்போது களமிறங்கி அதிரடி காட்டி வருகிறது. 

இந்திய திரைத்துறையில் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்து படங்களை தயாரித்து வருகின்றனர். ஆனால், அதற்கு வேட்டு வைத்து வந்தது தமிழ் ராக்கர்ஸ். அடுத்து மூவீஸ்டா இணையதளமும் களமிறங்கி உள்ளதால் திரைத்துறையினர் மத்தியில் பேரிட்டியை இறக்கி உள்ளது.