ஆராய்ச்சி கூட பண்ண மாட்டிங்களா? "இளையராஜா" பட போஸ்டர் - இயக்குனர் & தனுஷை வறுத்தெடுக்கும் ப்ளூ சட்டை மாறன்!

Ilayaraja Bio Pic : உலக புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் வாழ்கை வரலாறு தற்போது படமாகிறது. அதில் பிரபல நடிகர் தனுஷ், இளையராஜாவாக நடிக்கவுள்ளார்.

Movie reviewer blue sattai maran criticize ilayaraja bio pic movie poster ans

பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் ஏற்கனவே பல திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் உலக புகழ் பெற்ற இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இளையராஜாவாக அவர் நடிக்க உள்ளார் என்கின்ற தகவல் அண்மையில் வெளியானது. மேலும் இந்த திரைப்படத்தை ஏற்கனவே தனுஷை வைத்து "கேப்டன் மில்லர்" என்கின்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கு உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில் நேற்று இந்த திரைப்படம் குறித்து அதிகாரப்பூர் தகவல்கள் வெளியானதில் ஒரு கூடுதல் சிறப்பு தகவலாக, இந்த திரைப்படத்திற்கு உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் திரைக்கதை எழுதவிருப்பதாக அதிகாரப்பூர் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

Anna Serial : மேல கைவச்ச அவ்ளோதான்... முத்துப்பாண்டியை லெப்ட் ரைட் வாங்கிய இசக்கி - அண்ணா சீரியல் டுவிஸ்ட்

ஆனால் அந்த போஸ்டரில் பல தவறுகள் இருப்பதாக கூறி பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார். இளையராஜா பட போஸ்டரில் அவர் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வாசலில் நிற்பது போல போஸ்டர் அமைந்திருக்கிறது. ஆனால் பண்ணைபுரத்தில் இருந்து மதுரை வந்து, அதன் பின் சென்னை வந்தால் அவர் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு தான் வந்திருப்பார்.

அதே போல சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 1960களின் முற்பகுதிலேயே தார் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், ஆனால் போஸ்டரில் இளையராஜா சேரில் நிற்பது போல அமைக்கப்பட்டுள்ளது என்று கூறி இணையவாசிகள் சிலர் வெளியிட்ட கருத்தை இவர் தன் பதிவில் டேக் செய்துள்ளார். 

மேலும் "அடிப்படை ஆராய்ச்சி கூட இல்லாத போஸ்டர் டிசைன். அருண் மாதேஸ்வரனும், தனுஷூம்.. இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்துருக்காங்களோ.‌." என்று மாறன் குறிப்பிட்டுள்ளார். 

Suriya - Jyothika: யங் லுக்கில்.. லவ்வர்ஸ் போல் கஃபே முன் செல்ஃபி எடுத்து கொண்ட சூர்யா - ஜோதிகா! வைரல் போட்டோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios