மேலும் பல படங்கள் பூஜை போடப்பட்டு, முடிக்கப்படுவது இல்லை. ஒரு சில காரணங்களால் பாதியிலேயே கை விட படுகின்றது.  இந்நிலையில், புதிதாக திரையுலகில் அறிமுகமாகும் அனைத்து நடிகர் - நடிகைகளுக்குமே,  நாம் நடிக்கும் படம் வெளியாகுமா? ஆகாதா? என்ற சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது உருவாகி, விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் 'மேகி'. இந்த படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், முதல் முதலாக தயாரிப்பாளரை சந்தித்தது இவர் கேட்ட கேள்வி அவரையே அதிர வைத்ததாக தற்போது கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதாவது சமூக வலைத்தளத்தில், டப்மேஷ செய்த வீடியோக்கள் மூலம் தான் தனக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றும், தன்னை தயாரிப்பாளர் சந்தித்து பேசும் போது, அவரிடம் இந்தப் படத்தை முடித்து வெளியிடுவீர்களா என கேட்டேன், அவர் அதை கேட்டு  அதிர்ச்சி அடைந்தார்.

பின் கண்டிப்பாக இப்படம் வெளியாகும் என்கிற நம்பிக்கை கொடுத்த பின்பே, இந்த படத்தில் நடிக்க துவங்கியதாகவும் தெரிவித்துள்ள நிம்மி, இப்போதும் நான் அவரிடம் கேட்ட கேள்வியை நினைத்தால் நினைத்தால் சிரிப்பு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது விரைவில் இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளார் நிம்மி.