உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்களது தாய்மாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகைகளின் இன்ஸ்ட்டா இடுகைகளை இங்கு பார்க்கலாம்..
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது அம்மாவின் புகைப்படத்தை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன், அவரது அம்மா உடனான புகைப்படத்தை பகிர்ந்து,'அன்னையர் தின வாழ்த்துக்கள், அம்மா! உடல் ரீதியாக என்னால் முடியாது என்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்தவள். நான் இன்னும் சரியாகப் பற்றிக் கொண்டிருக்கிறேன். நான் அதை நினைக்கிறேன். அம்மாக்கள் செய்வதை சூப்பர் ஹீரோக்களால் கூட செய்ய முடியாது' என பதிவிட்டுள்ளார்.
காற்று வெளியிடை, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்த நாயகி அதிதி ராவ் ஹைதாரி' அம்மா வாழ்க்கையில் கடமையில் இருக்கும் தனிப்பட்ட தேவதை; என குறிப்பிட்டுள்ளார்.
ரகுல் பிரீத்தி சிங் தன்னுடைய பக்கத்தில் அவரது குழந்தை பருவ புகைப்படத்தை பகிர்ந்து, என் அன்பான அம்மா, நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.. நிபந்தனையற்ற அன்பின் வரையறை நீங்கள், அந்த அன்பை உணர நான் பாக்கியசாலி. என நீண்ட பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நாயகி அலியாபட் தனது அன்னையர் தின வாழ்த்துக்களை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
எந்நாளும் அன்னையர் தினம் என குறிப்பிட்டி ராசிக்கன்னா தனது அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
சமீபத்தில் தாயான சாய்ஷா தனது அன்னையர் தின வாழ்த்துக்களை அவரது அம்மா புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அம்மா புகைப்படத்துடன் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
சமீபத்திய பிரபலமாகி வரும் நடிகை ஷிவானி அவரது அம்மாவுடனான புகைப்படத்துடன், உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க ' என பதிவிட்டுள்ளார்.
