லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு தல அஜித்தின் தீவிர ரசிகர் என அனைவருக்கும் தெரியும். பல படங்களில் அஜித்தின் பெயரை அவர் பயன்படுத்தியும் உள்ளார்.
அதனால் பெரும்பாலான அஜித் ரசிகர்களுக்கு சிம்புவை பிடிக்கும்.
ஆனால் தற்போது சிம்பு நடித்துவரும் AAA மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கங்களில் அஜித்தின் பிரதிபலிப்பு இருக்காது என சிம்புவே கூறியுள்ளார்.
மேலும் அஜித்தை யாரும் கண்டுகொள்ளாத காலத்திலேயே நான் அவரின் கட்அவுட் முன்பு 'தல' என கத்தியுள்ளேன் என்றும்.
தற்போது வரும் படங்களில் பெரும்பாலும் அஜித் பெயரை பயன்படுத்துகின்றனர். அதனால் இனி என் படங்களில் தல பயன்படுத்தப்போவதில்லை" என முகநூலில் ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
