ஆர்.ஜே.பாலாஜி , என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன். இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நயன்தாரா அம்மன் கெட்டப்பில் நடிக்க விரதம் எல்லாம் இருந்தார். எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. 

கொரோனா பிரச்சனை ஆரம்பிக்கிறது முன்னாடியே கன்னியாகுமரி மற்றும் சென்னையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் படக்குழுவினர் நடத்தி முடித்துவிட்டனர். படத்தை பற்றி ஏற்கனவே மெளனம் கலைந்த ஆர்.ஜே.பாலாஜி, மூக்குத்தி அம்மன் கதை நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்படும் கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்று குறிப்பிட்டிருந்தார். 

மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழுவினர் இரண்டு போஸ்டர்களை ரிலீஸ் செய்திருந்தனர். 

முழுக்க முழுக்க அம்மனாகவே காட்சி தந்த நயன்தாராவின் செகண்ட் லுக் போஸ்டர் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது குறிப்பிடத்தக்கது. சிலர் நயன்தாரா அம்மன் கெட்டப்பிற்கு பொருத்தமாகவே இல்லை என்றும், அம்மன் ஏன் பயந்த மாதிரி இருக்கு என்று கலாய்த்திருந்தனர். 

இந்நிலையில் பல படங்கள் வரிசையாக ஓடிடி தளத்தில் வெளியாகி வருவது போல் இந்த படத்தையும் ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று, நடைபெற்ற, டிஸ்னியின் காபி வித் கோலிவுட் என்கிற நேரடி ஒளிபரப்பில், பல பிரபலங்கள் கலந்து கொண்டு புதிதாக வெளியாக உள்ள வெப் சீரிஸ்கள் பற்றி அறிவித்தனர்.

இதில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி நயன்தாராவுடன் நடந்து செல்வது போல் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் குறித்த முக்கிய தகவல் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாவதாகவும் தெரிவித்துள்ளார். ஒருவேளை மூக்குத்தி அம்மன் படத்தின் டீசர் நாளை மறுநாள், சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைரலாகி வரும் நயன்தாராவின் புதிய போஸ்டர் இதோ...