Asianet News TamilAsianet News Tamil

கொரோனா நிவாரண நிதியாக முதல்வரை சந்தித்து ரூ.1 கோடி வழங்கிய மலையாள தயாரிப்பாளர்..!

தமிழில் ஒரு சில படங்களை மட்டுமே தயாரித்துள்ள பிரபல மலையாள தயாரிப்பாளர், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.1 கோடி வழங்கியுள்ளார். 
 

molly wood producer give the 1 core for corona relief
Author
Chennai, First Published Jun 12, 2021, 1:30 PM IST

தமிழில் ஒரு சில படங்களை மட்டுமே தயாரித்துள்ள பிரபல மலையாள தயாரிப்பாளர், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.1 கோடி வழங்கியுள்ளார். 

மேலும் செய்திகள்: கப்பிங் தெரபி செய்து கொண்ட விஷ்ணு விஷால்..! வைரலாகும் புகைப்படம்..!
 

கொரோனா இரண்டாவது அலை, தீவிரமாக பரவி வந்த நிலையில்... தற்போது மத்திய - மாநில அரசின், துரித நடவடிக்கையின் காரணமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே... இந்த ஊரடங்கு காலம் மக்களின் பொருளாதாரத்தை பாதிக்காத வகையில், சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

molly wood producer give the 1 core for corona relief

மேலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வண்ணம், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. அதே போல் கொரோனா தடுப்பு பணிக்காக, முதல்வரின் நிவார நிதிக்காகவும் பிரபலங்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த நிதி உதவி அளித்து வருகிறார்கள். அந்த வகையில்,  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  சந்தித்து மலையாளப் படத் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்: நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? ரசிகர்களை ஆச்சர்யடுத்திய பிறந்தநாள் புகைப்படம்..!
 

molly wood producer give the 1 core for corona relief

இவர், தமிழில் 'தூங்காவனம்', 'தனுசு ராசி நேயர்களே' போன்ற சில படங்களை தயாரித்துள்ளார். மேலும் மலையாளத்தில் வரலாற்று கதையாக எடுக்கப்பட்ட பழசிராஜா, உள்ளிட்ட பல பிரமாண்ட படங்களை தயாரித்துள்ளார். திரைப்பட தயாரிப்பை தொடர்ந்து, தொழிலதிபராகவும் கோகுலம் கோபாலன் உள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு சிலர் ஏற்கனவே முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ள நிலையில் தற்போது மலையாள தயாரிப்பாளரும், தன்னுடைய பங்கிற்கு ரூ.1 கோடி கொடுத்து உதவியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios