mohanlal son admited in hospital

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன் லால். தற்போது அவருடைய மகன் பிரணவ், முன்னணி இயக்குனர் ஜீது ஜோசப் இயக்கத்தில் 'ஆதி' என்கிற படத்தில் அறிமுகமாக உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவைச் சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது சண்டைக்காட்சியின் போது பிரணவிற்கு கையில் பலமாக அடிப்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது.

பின் படக்குழுவினர் உடனடியாக பிரணவை அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு கையில் இரண்டு தையல் போடப்பட்டது. மேலும் ஒரு வாரத்திற்கு அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம்.