உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சிக்கு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஜூன்  23ஆம் தேதி துவங்க உள்ள, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது.  ஏற்கனவே நடிகை லைலா, ராதாரவி, டி.ராஜேந்தர்  போன்ற பிரபலங்கள் கலந்து கொள்வதாக கூறப்பட்ட நிலையில்,  இதனை அவர்கள் மறுத்தனர்.

இதை தொடர்ந்து, 'ஓகே ஓகே' படத்தின் மூலம் அறிமுகமான காமெடி நடிகை மதுமிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை அவரே உறுதி செய்தார்.  

இதையடுத்து தற்போது வெளியாகியுள்ள தகவலில்,  மற்றொரு பிரபலத்தின் பெயர் வெளியாகியுள்ளது. கடந்த சீசனில் குரல் எக்ஸ்பர்ட்  ஆனந்த் வைத்தியநாதன் கலந்து கொண்டது போலவே, இம்முறை கர்நாடக இசை பாடகரும், வயலின் விடுவானுமான  மோகன் வைத்யா கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.