கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது வாரமாக இன்று யார் வெளியேற போகிறார் என்ற ஆவல் இப்போது கிளம்பியுள்ளது. அதன்படி சரவணன், மோகன் வைத்தியா, கவின் இவர்கள் மூவரில் யார் வெளியேற போகிறார் என்ற தகவல் கசிந்து உள்ளது

சென்றவாரம் வெளியேற வேண்டிய நபராக டேஞ்சர் ஜோனில் இருந்தவர் மோகன் வைத்யா. அதேபோன்று கவின் சக போட்டியாளர்களுடன் காதல் விவகாரம் தொடர்பாக நேற்று அழுது புலம்பி விட்டார்.பின்னர் அவரே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். 

இது ஒருபக்கம்.. இன்னொரு பக்கம் மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பெரிய கண்டெண்ட் கொடுக்க முடியாமல் இருக்கும் சரவணன். இவர்களில் யார் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது என்றால் மோகன் என்றே சொல்லலாம். காரணம் எதற்கெடுத்தாலும் அழுவதும், அருகில் இருப்பவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது மட்டுமே இருந்தது. ஆடியன்சுக்கு பெரிய அளவில் கன்டென்ட் கொடுக்க முடியாத ஒரு நபராக மோகன் இருப்பதால் இந்த வாரம் மோகன் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சென்ற வாரம் நிகழ்ச்சி மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றே கருத்துக்கள் வெளியாகி உள்ளது. இதற்கு உதாரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த promo வெளியாகும்போது. மக்கள் அதிக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த கருத்துகளில் மீண்டும் வனிதா வந்தால் நல்லா இருக்கும்... லாஸ்லியா முகத்தை அடிக்கடி காண்பிக்க வேண்டாமே.. தாங்க முடியவில்லை.. என்றவாறு தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

எனவே மக்களுக்கு போர் அடித்து விட்ட இந்த நிகழ்ச்சி மீண்டும் சூடு பிடிக்க வேறு ஒரு முக்கிய திட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாம் பிக் பாஸ் டீம்.