Mohan Raja and Vijay spent quality time with each other after several years

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் விஜய் ஷூட்டிங்கிலிருந்து ஓய்வெடுத்து வீட்டிலிருக்கும் சமயத்தில் தனது அடுத்த படத்துக்கான கதையைக் கேட்கத் தொடங்கியிருக்கிறார். முதலில் அட்லீ தான் அடுத்த படத்துக்கு அடிபட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தம்பி பழைய மெகா ஹிட் படங்களிலிருந்து கதையை சுடுவதால், அவரை கழட்டி விட்டுவிட்டு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இயக்குநர் வினோத்திடம் விஜய் கதை கேட்டிருந்தார்.

ஆனால், விஜய் முருகதாஸ் படத்தில் கமிட் ஆகும் நிலையில் இருந்தபோது, வினோத் அஜித்துக்கு கதை சொல்லி ஓகே செய்துவிட்டார். எனவே, விஜய்-வினோத் கூட்டணி இப்போதைக்கு இல்லை என தெளிவாகத் தெரிகிறது.

முருகதாஸ் திரைப்படம் வெகுவேகமாக படமாக்கப்பட்டு கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தை நெருங்கிவிட்டது. பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளுக்காக சில மாதம் செட் போடவேண்டும் என ஒரு பக்கம் திட்டமிடப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிவாவுடன் அஜித் கமிட் ஆனதை அறிந்து மீண்டுமொருமுறை வினோத் விஜய் தரப்பிலிருந்து அணுகப்பட்டார்.

அஜித்-சிவா கூட்டணியில் படம் உருவாக தாமதமானதால், ஸ்கிரிப்டை முடித்துக்கொடுக்க முடியுமா என அஜித் தரப்பிலிருந்து கேட்கப்பட்டிருக்கிறது. எனவே, வினோத் இப்போதைக்கு வரமாட்டார் என தெரிந்த விஜய், தனது அடுத்தபடம் யார் கையில் என்பது குறித்து முடிவெடுத்திருக்கிறார். ஆமாம் அவர் வேறுயாரும் அல்ல வேலாயுதம் இயக்குனர் மோகன் ராஜாவின் தான்.

அசாத் திரைப்படத்தை வேலாயுதம் என ரீமேக் செய்ய முடிவெடுத்தபோது விஜய்யை அணுகியதற்கும், இப்போது “தனி ஒருவன்”, “வேலைக்காரன்” என இரு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துவிட்டு விஜய்யின் இமேஜை மாற்றியமைப்பதற்குமான மோகன் ராஜாவின் பயணம் மிக முக்கியமானது.

என்பதால், அவர் கேட்கும் நேரத்தைக் கொடுத்திருக்கிறார் விஜய். இப்போதைக்கு ஒன்-லைன் சொல்லி கமிட் செய்வதைவிட, கதை முழுவதையும் எழுதி முடித்துவிட்டு வர்றேன். அதைப் படித்துவிட்டு சொல்லுங்கள் என சொன்னாராம் மோகன் ராஜா. எனவே, அதுவரையில் வேறு கதைகள் எதுவும் வேண்டாம் என தற்போதைக்கு மோகன் ராஜாவோடு முற்றுப் பபுள்ளி வைத்துவிட்டாராம்.