Mohan Lol Villain postponed to January 2018

கேரள சூப்பர்ஸ்டாரான மோகன்லாலின் வில்லன் படம் தீபாவளியன்று வெளியாகும் தளபதியின் மெர்சல் படத்தால் தள்ளி போகிறது. 

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லால் மஞ்சு வாரியார் நடித்த வெளியாகவிருந்த படம் வில்லன். இப்படத்தின் மூலம் விஷால் மற்றும் ஹன்சிகா மோத்வானி முதன்முறையாக மலையாள திரையுலகில் கால்பதிக்கின்றனர். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இதில் மோகன்லால் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளர்.

தீபாவளி விருந்தாக ‘மெர்சல்’ திரைப்படத்துடன் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப் பட்ட மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த வில்லன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மோகன் லால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.