கடந்த வாரம், ஓடிடி தளத்தில் வெளியான மலையாள திரைப்படமான 'திரிஷ்யம் 2 ' நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ஹீரோ சூப்பர் ஸ்டார் மோகன் லால், பரபரப்பு ட்விட் ஒன்றை போட்டுள்ளார். 

கடந்த வாரம், ஓடிடி தளத்தில் வெளியான மலையாள திரைப்படமான 'திரிஷ்யம் 2 ' நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ஹீரோ சூப்பர் ஸ்டார் மோகன் லால், பரபரப்பு ட்விட் ஒன்றை போட்டுள்ளார்.

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், 2016 ஆம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம்’ முதல் பாகம் எப்படி ரீமேக்கே செய்யப்பட்டதோ, அதே போல் 'திரிஷ்யம் 2 ' படத்தையும் ரீமேக் செய்ய, தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தெலுங்கு, ஹிந்தி, போன்ற மொழிகளில் தற்போது ரீமேக் செய்யும் வேலைகள் துவங்கி விட்டது. ஆனால் தமிழில், தற்போது உலகநாயகன் கமல் அரசியல் பணிகளில் பிஸியாக உள்ளதால் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும் ‘திரிஷ்யம் 2’ தமிழில் மற்ற நடிகர் நடிப்பாரா? அல்லது கமல் நடிப்பாரா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. முதல் பாகத்திற்கு ஏற்ற, இரண்டாம் பாகம் என, ரசிகர்களால் புகழப்படும் இந்த படத்தை பார்த்து, இரண்டாம் பாகம் படம் எடுக்கும் இயக்குனர்கள் கற்று கொள்ளவேண்டும் என விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

மேலும் செய்திகள்: இயக்குனர் மாரி செல்வராஜ் மனைவிக்கு நடந்த வளைகாப்பு! நேரில் வாழ்த்திய பிரபலங்கள்..!

இந்நிலையில், நடிகர் மோகன் லால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவு, ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. அதாவது " அனைவருக்குமே ஜார்ஜு குட்டி போன்ற ஒரு நபர் அவர்களது வாழ்க்கையில் இருக்கிறார். உங்கள் ஹீரோவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்யுங்கள் ஆச்சர்யம் காத்திருக்கிறது என பதிவு செய்துள்ளார். 

மேலும் செய்திகள்: வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் ஓவர் டைட் டிரஸ்..! தினுசு தினுசா போஸ் கொடுத்த அழகு ராட்சசி அமலா பால்!

எனவே ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்க்கையில் உள்ள ஹீரோவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு எந்த விதமான ஆச்சர்யம் காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

அந்த ட்விட் இதோ...

Scroll to load tweet…